பொறியியல் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு - (Part 2 of Future of Engineering Colleges - பொறியியல் கல்லூரிகளின் எதிர்காலம்?)

பொறியியல் கல்லூரிகளில் படித்த / படிக்கும் மாணவர்களின் அன்பான கவனத்திற்கு..

பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணத்தினையும், படித்தேன் வேலையே கிடைக்கல என்ற எண்ணத்தையும் தயவுசெய்து மாற்றப் பழகிக் கொள்ளுங்கள். இந்த உலகில் நீங்கள் என்ன படித்தாலும் வேலை கிடைக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை கிடைக்கும். வேலை கிடைக்க நீங்கள் என்ன செய்தீர்கள் ? படிப்பு என்பது ஒரு தகுதி , அது மட்டுமே உங்கள் வேலையை கொடுத்துவிடாது. அதையும் தாண்டியது செயல் திறன். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்களை முன்பின் அறியாத ஒரு நிறுவனம் எப்படி தெரிந்துகொள்ளும். அங்கே அந்த நிமிடங்களில் உங்களை வேலைக்கு எடுக்கவேண்டிய நிறுவனத்திற்கு தெரியப்படுத்தவேண்டியது நீங்கள் எந்த அளவு செயல்திறன் மிக்கவர் என்பது


ஒரு நிறுவனம் உங்களை ஏன் வேலைக்கு எடுக்க வேண்டும்? என்ற சாதாரண கேள்வியை உங்களுக்குள் கேட்டுப்பாருங்களேன்.
உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்? ,  நிறுவனங்களுக்கு தங்கள் வேலை முடிய வேண்டும். யதார்த்தம் இவ்வளவே
ஆனால், ஏன் நிறுவனங்கள் ஆட்கள் வேண்டும் என்று, விளம்பரம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வேலை தேடுபவர்களும் வேலை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 
அவர்களிடம் நீங்கள் உங்களை எப்படி கொண்டு செல்வீர்கள் ? உங்களின் வேலை செய்யும் திறன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சென்றடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று என்றாவது யோசித்ததுண்டா?  நிச்சயம் ஆம், என்று பதில் வரும். ஆனால் யோசித்ததை எப்படி செயலாக்குவீர்கள்? 
நாம் யோசிக்கும் எந்த ஒரு எண்ணமும் (Idea) நமக்கு எப்போதும் மனக்கிளர்ச்சியைத் தரும். நம்முடைய எண்ணங்கள் நம்மில் ஒரு கருத்து உலகத்தை மாற்றும் என்றெல்லாம் தோன்றும். ஆனால் செயல்முறைபடுத்தும் போது தெரியும் அதன் சிக்கல்கள்.

பெரும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு நல்ல வேலை திறன்மிக்க வேலையாட்கள். பலர் நல்ல திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் நல்ல வேலையாளர்களாக இருப்பார்கள். இந்த இரண்டையும் இணைக்கும் நபர்கள்தான் செயல்திறன் மிக்க வேலையாட்கள்.


இப்போது புரிகிறதா? நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வேலையாட்கள் பற்றி! சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளே உங்களின் நிறுவனங்களின் மூலதனம். அந்த பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்ற உங்களின் செயல்முறைகள் தான் உங்களின் எதிர்காலம்.

எனவே உங்களின் சமூக அறிவை இன்னமும் வளருங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் தேவைகள் என்னவென்பதைப்பற்றி பாருங்கள்.


சிவில் மாணவனாக இருந்தால் குறைந்த விலையில், குறைந்த நேரத்தில் தரமான கட்டிடங்களை கட்டுவதை சவாலாக எடுத்துச் செய்யுங்கள். பழைய கட்டிடங்களை பழமை மாறாமல் வலுப்படுத்தும் பணிகளை முயற்சி செய்யுங்கள்.
தொலைதொடர்பு துறையில் இருக்கும் தொழில்நுட்பங்களை எப்படி மேம்படுத்தலாம். பாதுகாப்புத்துறையில் எப்படி மேம்படுத்தலாம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


கணினி தகவல் தொழில்நுட்பத்துறையில் செயற்கை நுண்ணறிவு, ஆழ்ந்த நுண்ணறிவு பெருந்தரவக பொருட்களின் இணையம் ஆகியவை அடுத்த 5 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சி காண உள்ளது.

ஒவ்வொருத் துறையிலும் பல பிரச்சனைகள் உள்ளன. அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள்தான் உங்கள் வெற்றி.
கடையில் காசு கொடுத்து வாங்காமல் உங்களுக்கு என்ன தெரிகிறதோ அதையே செய்து காட்டுங்கள் அதுதான் உங்கள் நேர்மை.


நிறுவனங்கள் எதிர்பார்ப்பது செயல்திறன் மிக்க வேலையாட்கள். சாதாரண செல்பேசிகள் எப்படி Smartphone ஆன பின் உலகசந்தையில் பெரிய புரட்சி ஏற்பட்டதோ, அதேதான் இப்போதும், நீங்கள் சாதாரண வேலையாள் அல்ல அதிக செயல்திறனுள்ளவுன் என்று உரக்கச் சொல்லுங்கள். 

வலைப்பூக்கள் போன்றவற்றில் நீங்கள் எழுதிவாருங்கள்
இப்போது சமூக தளங்களில் உங்கள் பங்களிப்பை வைத்து மட்டுமே வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பல திட்டங்கள் உங்களுக்கு பயன்படும்
போன்ற இணையத்தளங்களில் நீங்களும் பங்களியுங்கள். உங்கள் சுயவிபர குறிப்பில் உங்களின் பங்களிப்பினை குறிப்பிடுங்கள்.
செய்தித்தாள்களிலும்,. இணைய இதழ்களிலும் உங்கள் கட்டுரையைகளை பதிப்பியுங்கள்.
நிச்சயம் உலகம் உங்கள் வசப்படும்

நன்றி!

தொடரும்….
செல்வ.முரளி
Part 1 : Future of Engineering Colleges - பொறியியல் கல்லூரிகளின் எதிர்காலம்?